தர்பூசணியை வாயில் கவ்வியபடி நீந்திய முதலை : வைரல் வீடியோ
அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஒரு முதலை தர்பூசணி பழத்தை தனது வாயில் வைத்தபடி நீந்திச் செலும் முதலையின் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க நாட்டில், போர்ட் வேனில் உள்ள ஷூகீப்பர் என்ற விலங்கு அருங்காட்சியகத்தில் ஒரு முதலை வளர்க்கப்பட்டு வருகிறது. நீரில் நீந்திக் கொண்டிருந்த முதலை, தனது வாயில் ஒரு பெரிய தர்பூசணிப் பழத்தை வைத்துக் கொண்டு நீந்திச் சென்றது. ஆனால், அந்த பழத்தை அது கடிக்காமல் வைத்துள்ளதைப் பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இணையதளங்களில் இந்த வீடியோ வைரலாகிவருகிறது.