1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2019 (15:33 IST)

சீக்கிய போலீஸ் அதிகாரி அமெரிக்காவில் சுட்டுக்கொலை! பகீர் சம்பவம்

அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற பகுதில் வசித்து வந்தவர் சந்தீப் சிங் தலிவால்  (40). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் அமெரிக்கா  காவல்துறையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று சாலையில் சென்று கொண்டிருந்த அவரை, ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற பகுதில் வசித்து வந்தவர் சந்தீப் சிங் தலிவால்  (40). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர்,  அமெரிக்கா  காவல்துறையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி அதன் ஆவணங்களை சரிபார்த்து விசாரித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
 
அப்போது, அந்தக் காரில் இருந்து வெளியே வந்த ஒரு நபர் சந்தீப் சிங்கின் பின் பக்கத் தலையில் திடீரென  சுட்டார். இதில், சந்தீப் சிங் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிஓடிய குற்றவாளியைப் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவரது பெயர் ராபர்ட் (47) என்பது தெரியவந்தது. அவரைக் கைது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.