குத்தியிருந்தா என்ன ஆயிருக்கும் ? ஒரு செகண்டில் உயிர் பிழைத்த பெண் ... வைரல் வீடியோ
அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா என்ற இடத்தில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு வந்த காருக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா என்ற இடத்திற்கு வந்த லிண்டா டெனண்ட் என்ற பெண், ஒரு காருக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு காருக்கு திரும்ப முயன்ற போது, சட்டென ஒரு மான் அவரது தலையைத் தாண்டி குதித்து ஓடியுள்ளது.
இதில், மானின் கொம்பு தலையில் முட்டியதால் ரத்தம் வழிந்து தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார் லிண்டா. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லிண்டா இதுகுறித்து கூறியதாவது :
என்னை யாரோ மறைவாக இருந்து கண்காணிப்பது போலுணர்தேன். அதன்பின் எதிர்பாராத விதமாக ஒரு மான் என தலையை முட்டித் தாண்டிச் சென்றுவிட்டது.
நல்ல வேளை என்னை அதன் கொம்பால் குத்தாமல் விட்டதால் தப்பித்தேன் என இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.