ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (07:18 IST)

அடுத்த ஆண்டு தான் பூமிக்கு திரும்புவார்.. விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா குறித்து நாசா..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா மற்றும் போயிங் நிறுவன அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பும்போது சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் அழைத்து வரப்படுவார்கள் என்றும், "ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் செப்டம்பர் 24 ல் விண்ணில் செலுத்தப்படும் என்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஜூன் மாதம் சென்ற  சுனிதா வில்லியம்ஸ் உள்பட இரண்டு விண்வெளி வீரர்கள் பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவது குறித்து நாசாவின் அட்மினிஸ்ட்ரேட்டர் பில் நெல்சன் பத்திரிகையாளர் சந்திப்பில்  கூறியபோது, ‘விண்வெளிப் பயணம் மிகவும் ஆபத்தானது,  பாதுகாப்பான விண்கலனாக இருந்தாலும் அதில் ஆபத்து அதில் உள்ளது. குறிப்பாக சோதனை அடிப்படையிலான பயணம் பாதுகாப்பானது அல்ல, இதை அறிந்து தான் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். இந்த நிலையில் இன்னும் சில மாதங்கள் விண்வெளியில் இருவரையும் தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம்.

அவர்கள் இருவரையும் பூமிக்கு கொண்டு வர போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் தயாராகி வருகிறது. அதில் அவர்கள் பூமிக்கு திரும்புவதுதான் பாதுகாப்பான இருக்கும் என்று கூறினார்.

Edited by Siva