ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (12:49 IST)

ஒரு மாதமாக சூரியன் மறையாத தீவு:அதிசயம் ஆனால் உண்மை

வடக்கு நார்வே நாட்டில் அமைந்துள்ள ஒரு தீவில் கடந்த ஒரு மாதமாக சூரியன் மறையாமல் இருந்துவருவது ஆச்சரியமாகவும் விநோதமாகவும் இருக்கிறது.

ஐரோப்பா கண்டத்தின் நார்வே நாட்டில் அமைந்துள்ளது மேற்கு ட்ரோம்சோ தீவு. இந்த தீவு ஆர்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.

ஆர்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளதால், நார்வே நாட்டின் மேற்கு பகுதிகளில் 60 நாட்கள் பகலாகவும், 60 நாட்கள் இரவாகவும் இருக்கும்.

இந்நிலையில் மேற்கு ட்ரோசோ தீவில் கடந்த மே 18 முதல் சூரியன் மறையாமல் இருந்துவருகிறது என்று தெரியவந்துள்ளது.

இதே போல் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இந்த தீவில் சூரியனே உதிக்காது என்றும் அந்த ட்ரோம்சோ தீவில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.

மேலும் சூரியனே உதிக்காத அந்த மூன்று மாதங்களை “போலார் இரவுகள்"என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது.

ட்ரோம்சோ தீவில் சுமார் 300 மக்கள் வசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நீண்ட பகல் மற்றும் நீண்ட இரவுகள் கொண்ட இத்தீவினை “கால நேரம் அற்ற தீவு” என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று ட்ரோன்சோ தீவின் மக்கள் நார்வே அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இனி வரும் ஜூலை 26 வரை, சூரியன் இந்த தீவில் மறையாது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.