செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (19:33 IST)

சாதனை படைத்த பிபிசி – உலகளவில் அதிகளவு பார்வையாளர்களை கொண்ட ஊடகம்

இந்த வருடத்தின் அதிகளவு பார்வையாளர்களை பெற்ற ஊடகங்களில் பிபிசி உலகளவில் 426 மில்லியன் (42 கோடி 60 லட்சம்) பார்வையாளர்களை கொண்ட ஊடகமாக சாதனை படைத்துள்ளது.

 
லண்டனில் தொடங்கப்பட்ட மிகப்பழமையான செய்தி ஊடகம் பிபிசி. 1922ல் ரேடியோ சேவையாக தொடங்கப்பட்ட பிபிசி தற்போது டிவி, ரேடியோ, ஆன்லைன் செய்திகள் என பலதரப்பட்ட சேவைகளை உலகம் முழுவதும் வழங்கிவருகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவர்கள் மொழிகளிலேயே செய்திகளை வழங்க தொடங்கப்பட்ட பிபிசி உலக சேவையானது 42 மொழிகளில்  உலகெங்கும் செய்திகளை வழங்கி வருகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட உலக பார்வையாளர்கள் கணக்கெடுப்பில் (GAM) பிபிசி மற்றும் பிபிசி உலக சேவை இரண்டிற்குமாக 426 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்திகள் கடந்த ஆண்டைவிட தற்போது 47 மில்லியன் அதிகமான பார்வையாளர்களையும், பிபிசி உலக சேவை கடந்த ஆண்டைவிட 41 மில்லியன் அதிகமான பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.



இதுகுறித்து பிபிசியின் இயக்குனர் டோனி ஹால் “ஒவ்வொரு நாளும் நாங்கள் சுதந்திரமான, அவசியமான செய்திகளை உடனுக்குடன் இந்த உலகிற்கு கொடுத்து வருகிறோம். இன்று பிபிசி எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. இரண்டாம் உலகப்போரின்போது உலக மக்கள் அனைவருக்கும் செய்திகளை வழங்க பிபிசி உலக சேவை பிரிட்டன் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இன்று அதன் பலனை பிபிசியும், லண்டனின் ஒன்றிணைந்த ராஜ்ஜியங்களும் காண்கின்றன” என தெரிவித்துள்ளார்.

அதேபோல உலக அளவில் செய்திகளை வழங்கி வரும் பிபிசி உலக சேவையில் ரேடியோ, டி.வி, ஆன்லைன் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த உலக சேவையில் அதிகமான நேயர்களை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இரண்டாவது இடத்தில் நைஜீரியாவும், மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. இந்தியாவில் பிபிசி உலக சேவையை பெறுவோர் 50 மில்லியன் மக்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 454 மில்லியன் இல்லங்களிலும், 178 கப்பல்களிலும், 53 விமான சேவைகளிலும் பிபிசி சேவைகள் உபயோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை முதன்முதலில் தொடங்கி 1922ல் தொடங்கி வைத்தவர், அந்நாளின் மிகப்பெரிய விஞ்ஞானியும் ரேடியோ அலைகள் மூலம் தகவல் பரிமாற்றத்தை சாத்தியம் ஆக்கியவருமான மார்க்கோனி ஆவார்.