ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (17:03 IST)

மூன்றாவது முறையும் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்! – செவ்வாய் பயணத்தில் பின்னடைவு!

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த ஸ்டார்ஷிப் விண்கலம் மீண்டும் வெடித்து சிதறியது.

உலக பணக்காரர்களில் முதலிடம் வகித்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மனிதர்களை விண்ணுக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு ஸ்டார்ஷிப் என்ற விண்கலத்தை தயாரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களில் இரண்டு முறை சோதனை செய்யப்பட்டபோதும் வெற்றிகரமாக பறந்த ஸ்டார்ஷிப் மீண்டும் தரையிறங்கும்போது வெடித்து சிதறியது. எனினும் தளர்வடையாமல் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது மூன்றாவது முறையாக ஸ்டார்ஷிப் விண்கலனை ஏவி சோதித்தது. இந்த முறையும் வெற்றிகரமாக புறப்பட்ட ஸ்டார்ஷிப் தரையிறங்கும்போது முன்பு போலவே வெடித்து சிதறியுள்ளது.

இதனால் மனிதர்களை செவ்வாய், நிலவு உள்ளிட்டவற்றிற்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும் கூடிய விரைவில் இந்த கோளாறை ஸ்பேஸ் எக்ஸ் சரிசெய்யும் என அதன் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.