செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (10:25 IST)

என் மீதான வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றுங்கள்… கங்கனா ரனாவத் மனு!

நடிகை கங்கனா ரனாவத் தன் மேல் உள்ள கிரிமினல் வழக்குகளை சிம்லாவுக்கு மாற்ற சொல்லி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாலிவுட்டின் திறமையான நடிகைகள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் கங்கனா ரனாவத் தனது அரசியல் நிலைப்பாட்டால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் மகராஷ்டிரா மாநில அரசின் மீதும் கடுமையான விமர்சனம் வைத்து பல வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது உச்ச நீதிமன்றத்தில் தன் மேல் மகாராஷ்டிராவில் உள்ள வழக்குகளை எல்லாம் இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார்.