திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (10:42 IST)

170 ஆண்டுகளாக மாயமான பறவை – இந்தோனேஷியாவில் திடீரென தோன்றியதால் ஆச்சர்யம்!

கடந்த 170 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத அழிந்துவிட்டதாக அறியப்பட்ட பறவை ஒன்று திடீரென தோன்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள், விலங்குகள் வாழ்ந்து வரும் நிலையில் காலப்போக்கில் இயற்கை, தட்பவெட்ப சூழல் மாற்றங்கள், வேட்டை ஆகியவற்றால் பல உயிரினங்கள் அழிந்துள்ளன. மேலும் பல உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. இந்நிலையில் அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட பறவை ஒன்று மீண்டும் தென்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய பகுதிகளில் காணப்பட்ட Black Browed Babbler என்ற பறவை கடந்த 170 ஆண்டுகளாக தென்படாத நிலையில் அந்த பறவை இனமே அழிந்திருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் நம்பி வந்தனர். இந்நிலையில் இந்தோனேஷியாவின் காட்டுப்பகுதியில் இந்த வகை பறவைகள் சில அரிதாக தோன்றியுள்ளன. இதை கண்ட இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் இயற்கையின் ரகசியங்கள் குறித்தும் வியப்படைந்துள்ளனர்.