1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (14:58 IST)

இலங்கை அரசு சேனல்களின் சேவை முடக்கம்!

இலங்கை அரசு சேனல்களின் சேவை முடக்கம்!
இலங்கை அரசு சேனல்களின் சேவை முடக்கம்!
இலங்கையின் அரசு தொலைக்காட்சி சேனல்கள் மூடப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொது மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் என்பதும் பிரதமர் அலுவலகம் மற்றும் அதிபர் அலுவலகம் சூறையாடப்பட்டது  என தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் இலங்கையில் உள்ள போராட்டக்காரர்கள் அரசு ஊடக நிறுவனத்தில் புகுந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதன் காரணமாக அரசு சேனல்களான ரூபவாஹினி மற்றும் ஐடிஎன் ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது 
 
இதனால் இலங்கை மக்கள் செய்திகளை அறிந்துகொள்ள முடியாமல் கடும் அதிருப்தியில் உள்ளனர்