வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (11:51 IST)

இலங்கையில் திடீரென அவசரநிலை பிரகடனம்: பொதுமக்கள் அதிர்ச்சி

Emergency
இலங்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் ஆட்சியாளர்கள் மீது ஆத்திரம் அடைந்து போராட்டம் செய்து வருகின்றனர் 
 
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் இலங்கையில் தற்போது போராட்டம் தொடர்ந்து வருவதை அடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.