திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (10:42 IST)

இலங்கை ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவி செய்யவில்லை - இந்திய தூதர்

Gotabaya Rajapaksa
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் மறுத்துள்ளார்.


கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை இலங்கைக்கு வெளியே அனுப்புவதற்கு இந்தியா உதவியதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனநாயக வழிமுறைகள் மற்றும் திப்புகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கையர்கள் தங்களின் வளம் மற்றும் முன்னேற்றத்திற்கான விருப்பங்களை உணரக் கோரும் வேளையில், இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதை இந்தியா தொடரும் என்று வலியுறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.