தொடர்புடைய செய்திகள்
- இலங்கை ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவி செய்யவில்லை - இந்திய தூதர்
- இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ: மக்கள் மாளிகையான அதிபர் மாளிகை!
- ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஏக்நாத் ஷிண்டேவும் ஆதரவு
- கட்டுக்கட்டாக பணம்.. அள்ளி செல்ல குவியும் மக்கள்! – இலங்கை அதிபர் மாளிகை விவகாரம்!
- திரௌபதி முா்முவுக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் ஆதரவு: எந்த மாநிலத்தில்?
இலங்கையின் அதிபரான பிரதமர்.. பொறுப்பேற்கும் ரணில் விக்ரமசிங்கே!
இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய நிலையில், அங்கிருந்து தப்பிய அதிபர் கோத்தாபய ராஜபக்சே தலைமறைவானார்.
அவர் மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை தற்காலிக அதிபராக இலங்கை சபாநாயகர் அபேவர்தனே அறிவித்துள்ளார். வெளிநாடு சென்றுள்ள கோத்தபய ரணிலை தற்காலிக அதிபராக நியமித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த தற்காலிக அதிபர் பதவியை மக்கள் ஏற்பார்களா என்ற குழப்பம் நிலவி வருவதால் இலங்கையில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
