வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (15:14 IST)

முஸ்லீம் அமைச்சர்கள், ஆளுனர்களை டிஸ்மிஸ் செய்ய போராட்டம்;

முஸ்லீம் அமைச்சர்களையும் ஆளுனர்களையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று புத்தமத பிக்குகள் உண்ணாவிரத போராட்டத்தை மூன்றாவது நாளாக நடத்தி வருகின்றனர். நல்லவேளையாக இந்த உண்ணாவிரதம் இந்தியாவில் நடக்கவில்லை. இது நடந்தது இலங்கையில் என்பது குறிப்பிடத்தக்கது
 
இலங்கையில் முஸ்லிம் அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்கள் அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா ஆகியோர்களை உடனடியாக  டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று புத்தமத பிக்குவும், இலங்கை நாடாளுமன்றத்தின் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரர் என்பவர் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
 
இலங்கையில் சமீபத்தில் தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததில் இருந்தே முஸ்லீம்களுக்கு எதிரான எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் முஸ்லீம் அமைச்சர் மற்றும் ஆளுனர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதால் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று புத்தமத பிக்கு அத்துரலிய ரத்ன தேரர் கடந்த வெள்ளியன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். 
 
இந்த போராட்டத்திற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆதரவு கொடுத்து வருவதால் அந்த பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை கண்டு தாங்கள் அஞ்சப்போவதில்லை என்றும் தாங்கள் பதவி விலகப்போவதில்லை என்றும்  முஸ்லிம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்கள் அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா ஆகியோர்கள் தெரிவித்துள்ளனர்.