திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (11:49 IST)

ஓபிஎஸ் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டார் – விடாமல் வம்பிழுக்கும் தங்கத் தமிழ்ச்செல்வன் !

தங்கத் தமிழ்ச்செல்வனின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல மறுத்துவிட்ட ஓபிஎஸ்-க்கு அவர் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார் .

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ததும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் உடனிருந்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமமுகவின் தங்கத்தமிழ் செல்வன், 'ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார் என்றும், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியையும், அவருக்கு ஆளுனர் பதவியும் கேட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'நான் பாஜகவில் இணையவுள்ளதாக தங்கதமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள்தனமான கருத்து. தர்மயுத்தம் தொடங்கியதிலிருந்து அவர் கருத்துக்கு நான் பதில் சொல்வதே இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் ஓபிஎஸ்-ன் இந்த கருத்துக்குப் பதிலளித்துள்ள தங்கத் தமிழ்ச்செல்வன் ‘ ஓபிஎஸ் பாஜகவில் இணையப்போவதாக தவறாக சொல்லிவிட்டேன். அவர் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டார்.  அதற்காகத்தான் அவர் குடும்பத்தோடு வாரனாசி சென்றார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் மே 23 ஆம் தேதிக்குப் பிறகு அவர் குடும்பம் பாஜகவின் அங்கமாகும்.’ எனக் கூறியுள்ளார்.