புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2019 (16:13 IST)

பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? பரபரப்பு தகவல்

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ததும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் உடனிருந்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமமுகவின் தங்கத்தமிழ் செல்வன், 'ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார் என்றும், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியையும், அவருக்கு ஆளுனர் பதவியும் கேட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'நான் பாஜகவில் இணையவுள்ளதாக தங்கதமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள்தனமான கருத்து. தர்மயுத்தம் தொடங்கியதிலிருந்து அவர் கருத்துக்கு நான் பதில் சொல்வதே இல்லை என்று கூறினார்/
 
மேலும் 3 எம்.எல்.ஏக்கள் விவகாரம் குறித்து அவர் கூறியபோது, '3 எம்எல்ஏக்களும் அமமுகவில் இயங்கிக் கொண்டிருக்க கூடிய ஆவணங்கள் சபாநாயகரிடம் உள்ளதாக அவர் தெரிவித்தார்
 
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில் ஓபிஎஸ் அணியில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் ஓபிஎஸ் மன வருத்தத்தில் இருப்பதாகவும், அதனால் அவர் பாஜகவுக்கு தாவக்கூடும் என்றும் வதந்திகள் கிளம்பியுள்ளது என்பது தெரிந்ததே