ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (12:40 IST)

திரும்ப திரும்ப இதயே கேட்குறீங்க? செய்தியாளர்களிடம் எகிறிய ஓபிஎஸ்

தங்கத் தமிழ்ச்செல்வனின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது திரும்ப திரும்ப இதயே கேட்குறீங்க? என கோபமாக பேசியுள்ளார். 
 
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ததும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் உடனிருந்ததும் தெரிந்ததே. இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமமுகவின் தங்கத்தமிழ் செல்வன், ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார். தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியையும், அவருக்கு ஆளுனர் பதவியும் கேட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நான் பாஜகவில் இணையவுள்ளதாக தங்கதமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள்தனமான கருத்து. தர்மயுத்தம் தொடங்கியதிலிருந்து அவர் கருத்துக்கு நான் பதில் சொல்வதே இல்லை என்று கூறினார். 
ஓபிஎஸ்-ன் இந்த கருத்துக்கும் பதிலளித்துள்ள தங்கத் தமிழ்ச்செல்வன் ‘ஓபிஎஸ் பாஜகவில் இணையப்போவதாக தவறாக சொல்லிவிட்டேன். அவர் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டார்.  அதற்காகத்தான் அவர் குடும்பத்தோடு வாரனாசி சென்றார் என கூறியுள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டனர், அதற்கு நான் பாஜக சேரப்போவது என்பது அடிமுட்டாள் தனமான கருத்து என்று கோபத்துடன் பதில் அளித்தார். தொடர்ந்து இதே கேள்வியை செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டே இருக்க கடுப்பான ஓபிஎஸ், திரும்ப... திரும்ப... இதுபற்றி கேட்கிறீர்களே? யார் உங்களை தூண்டி விட்டு இப்படி கேட்க சொல்கிறார்கள்? என்று கேட்ட, அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளும் கடுப்பாகி  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.