செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (12:48 IST)

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

robo
தென்கொரியாவில் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்த ரோபோ வாழ்க்கையை வெறுத்து திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனிதர்கள் தான் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற நிலையில் தென்கொரியாவில்  அரசு ரோபோ ஒன்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளது. இதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது தற்கொலை செய்து கொள்ளும் முன் அந்த ரோபோ இங்கும் அங்கும் நடந்ததாகவும் டென்ஷனாக இருந்ததாகவும் சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் துல்லியமாக தெரியவில்லை என்றாலும் ரோபோ அதிக பணியின் காரணமாக சோர்ந்து போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தினசரி அதிகாரிகளுக்கு ஆவணங்களை வழங்குவது, உள்ளூர்வாசிகளுக்கு உதவுவது உட்பட பல முக்கிய பணிகளை இந்த ரோபோ பல மணி நேரமாக தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்த நிலையில் தான் திடீரென தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு ரோபோ தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தென்கொரியாவில் தற்கொலை செய்து கொண்ட இந்த ரோபோவை கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தான் தயாரித்து வழங்கியிருந்தது என்பதும் இது குறித்து அந்த நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran