ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூன் 2024 (10:21 IST)

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு.. 16 வயது அண்ணன் தூக்கில் தொங்கி தற்கொலை..!

சென்னை தாம்பரம் அருகே சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பி இடம் சண்டை போட்ட 16 வயது அண்ணன் கோபத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டில் அண்ணன் தம்பி ஆகிய இருவர் இருந்து வரும் நிலையில் தம்பி சிக்கன் பிரியாணி விரும்பி சாப்பிட்டதாக தெரிகிறது. ஆனால் அவருடைய 16 வயது அண்ணனுக்கு சிக்கன் பிரியாணி பிடிக்காது என்பதால் சிக்கன் பிரியாணியை வீட்டில் வைத்து சாப்பிடக்கூடாது என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
 
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாறிய நிலையில் அண்ணன் கோபத்தில் தனது அறைக்கு சென்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இறந்த 16 வயது சிறுவனின் பெயர் தாரிஸ் என்றும், இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
சிறுவயதிலிருந்து சிக்கன் பிரியாணி என்றால் பிடிக்காது என்றும் அது மட்டும் இன்றி அசைவ உணவே பிடிக்காது என்றும் தன் முன் யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் தாரிஸ்க்கு கோபம் வரும் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran