வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (12:19 IST)

கடலில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி வரும் மிதக்கும் கிராமம்..

பிலிப்பைன்ஸில் ஒரு கிராமம் ஒவ்வொறு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கி வருகிறது.

புவி வெப்பமயமாதலால் பனிப் பாறைகள் டன் கணக்காக உறுகி வருகின்றன. இதனால் கடல் நீர் மட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள சிடியோ பரியஹன் கிராமம் ஒவ்வொறு ஆண்டும் 4 செ.மீ. வீதம் கடலுக்குள் மூழ்கி வருகிறது. முன்பு தீவாக இருந்துள்ளது இக்கிராமம், பின்பு கடல் மட்டம் அதிகரித்து வந்தமையால் தற்போது நிலப்பரப்பு ஏதுமில்லாத, மிதக்கும் வீடுகளாக காட்சியளிக்கின்றன.

இங்கு மின்சார அசதிகள் எதுவும் இல்லை. சோலார் சக்தியை பயன்படுத்தி அக்கம்பக்கத்தினருடன் மின் இணைப்பை பகிர்ந்து கொள்கிறார்கள். இங்கிருக்கும் ஒரு கிணறு தான் இக்கிராமத்தினரின் நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வந்த புயலில் நீதிமன்றம், தேவாலயம், பள்ளிக்கூடம் ஆகியவை அழிந்துவிட்டன.

இங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக இருப்பதால் வேறு எங்கும் போகமுடியவில்லை. மேலும் இங்குள்ள மக்கள் தங்களது இருப்பிடங்களை மூங்கில்களால் உயர்த்தி நீரில் மூழ்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்.