திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (11:02 IST)

பிரபல பாப் பாடகி மர்ம சாவு..

தென்கொரிய பாப் பாடகியும் நடிகையுமான கூ ஹரா, மர்மான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த 28 வயது பாடகி, கூ ஹரா அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர். இவர் காரா என்னும் பெண்களுக்கான இசைக் குழுவின் சார்பில் பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாப் பாடல்கள் பலவற்றை பாடியுள்ளார்.

கடந்த ஆண்டு தனது முன்னாள் காதலர் இவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் அளித்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து கூ ஹரா இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். மேலும் மன உளைச்சல் காரணாக தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மமாக இறந்துபோயுள்ளார். கூ ஹரா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.