திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (15:55 IST)

உடைந்த பனி சிற்பம்; பலியான இரண்டு வயது குழந்தை

லக்ஸம்பர்க்கில் பனி சிற்பம் உடைந்து விழுந்ததில் இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி, உலகம் முழுவதும் கிருஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுவதை தொடர்ந்து ஐரோப்பிய நாடான லக்ஸம்பெர்க்கில் தற்போதிலிருந்தே கிறுஸ்துமஸ்க்கான கொண்டாட்டங்கள் கலைகட்டி வருகின்றன.

மேலும் அங்குள்ள சந்தைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மக்களை கவர்வதற்காக பனி சிற்பங்கள், கிறுஸ்துமஸ் மரங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 8 மணியளவில் லக்ஸ்ம்பெர்க்கின் பிளேஸ் கில்லாம் என்ற பகுதியில் வடிவமைக்கப்பட்டிருந்த பனி சிற்பம் அருகில் இரண்டு வயது குழந்தை நின்றுகொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக பனி சிற்பம் உடைந்து குழந்தையின் மேல் விழுந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து சிற்பியின் வடிவமைப்பாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.