மவுண்டோனில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கொலை!
மத்திய ஆப்பிரிக்க நாடான சாத்தில் மக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான சாத்தில் என்டிஜாமேனாவில் மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 30 பேர் பலியாகினர், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
இதேபோல், மவுண்டோவிலும் மக்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது, மேலும், மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கபப்ட்டுள்ளது.
Edited by Sinoj