திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (21:06 IST)

பிரபல நடிகையை திட்டிய நடிகர் கஞ்சா கருப்பு…

.
ஓங்காரம் என்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு கலந்துகொள்ளாத நடிகையை  நடிகர் கஞ்சா கறுப்பு திட்டிப்பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


‘’ஓங்காரம்’’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை வட பழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடந்தது.

இந்த இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் மோகன் ஜி, நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டன்னர்.

அப்போது, மேடையில் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு,தயாரிப்பாளராய் இருப்பது கடினம், நாம் சினிமாவில் படம் தயாரித்து தோற்றபோது, என் அம்மா, நீ காசு கொடுத்து படிக்காத படிப்பை, சினிமாவின்  நீ படித்துள்ளாய் என்று கூறினார்.

இன்று ராஜராஜ சோழன் இந்துவா, முஸ்லிமா என்று பிரச்சனை செய்கிறார்கள் எதற்கு இதெல்லாம், படத்தை எடுத்தோமா, சம்பாரித்தோமா என்று இருக்க வேண்டும். என்று தெரிவித்தார்.

பின்னர், இப்படத்தில் நடித்த நடிகை இசை வெளியீட்டு விழாவில் வருவதற்கு ரூ.1 லட்சம் வேண்டுமென கேட்டதற்கு ஆபாசமாகத் திட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj