செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (09:08 IST)

188 பேரின் கதி என்ன? கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்

188 பேரின் கதி என்ன? கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்
ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 பயணிகள் விமானம் ஊழியர்களோடு சேர்த்து 188 பேருடன் பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
 
இதனையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு அதற்காக வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில் விமானம் பெரும் விபத்துக்குளாகி விமானத்தின்  பாகங்கள் ஜாவா கடற்கரையில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணித்த 188 பேரின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.