பாகிஸ்தானில் பயங்கரம்: பேருந்து மோதிய விபத்தில் 19 பேர் பலி

bus
Last Modified திங்கள், 22 அக்டோபர் 2018 (08:45 IST)
பாகிஸ்தானில் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
பாகிஸ்தானில் தேரா காஜி கான் நகரில், இரு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
 
விபத்துகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இடிபாடுகளில் சிக்கிய 40க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
 
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஸ் டிரைவரின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடைபெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :