பயங்கர விபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகரின் தந்தை: குழந்தை உள்பட 3 பேர் உயிருக்கு போராட்டம்

rana
VM| Last Modified செவ்வாய், 23 அக்டோபர் 2018 (14:39 IST)
‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் ராணா. தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார், இவரது தந்தை சுரேஷ்பாபு தெலுங்கு படங்களை தயாரித்து வருகிறார். 
சுரேஷ்பாபு, தனது சொகுசு காரில் ஹைதராபாத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கர்கானா பகுதியில் உள்ள இம்பீரியன் கார்டன் அருகே கார் வந்தபோது, இரு சக்கர வாகனம் மீது மோதியது. 
 
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சதீஷ் சந்திரா (வயது 35) நீலம் துர்கா தேவி (30) மற்றும் அவர்களின் குழந்தை சித்திஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 
 
உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுரேஷ்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :