சீனாவில் மீண்டும் தொடங்கிய பள்ளிகள்...
சீனாவில் இருந்து வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு உலக நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகள் சீனாவின் மீது வழக்கு தொடுத்து, இழப்பீடு கேட்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்நிலையில் கொரொனா வைரஸின் தாயகமாகக் கருத்தப்படும் ஜூஹான் மாகாணத்தில், கொரோனா பாதிப்புக்கு அடுத்து சுமார் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜூன் மாதத்தில் கல்லூரிகளுக்கு நடக்க இருந்த தேர்வுகள் கொரோனா காரணமாக ஜுலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.