1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 மே 2020 (19:13 IST)

இன்று ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: கேரள முதல்வரின் அசத்தல் நிர்வாகம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவால் பாதிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிக அதிகமாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இன்று ஒருவருக்கு கூட புதியதாக கொரோனா தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502 பேர் என்றும் ஆனால் அதில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை 470 பேர்கள் என்றும் கேரள அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 16620 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் இவர்கள் 14402 பேர் வீடுகளிலும் மீதமுள்ளவர்கள் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
கேரள அரசு படிப்படியாக கொரோனாவில் இருந்து மீண்டு வருவதாகவும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் சிறப்பான நிர்வாகத்தால் கேரளா கொரோனா இல்லாத மாநிலமாக மிக விரைவில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது