வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 6 மே 2020 (19:53 IST)

மத்திய அரசு மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது - ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மக்களிடம் இருந்து மத்திய அரசு பணத்தை எடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரொனாவால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 13 ரூபாயும் உற்பத்தி விலையில் மத்திய அரசு நேற்று உயர்த்தியது.

இதுகுறித்து காங்கிரஸ்  மூத்ததலைவர் ப. சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

’’கொரோனா காரணமாக பொருளாதாரம் சரிந்துள்ளதால், மத்திய அரசு நிதி பற்றாக்குறையை சரிசெய்ய கடன் வாங்க வேண்டும். இந்த சூழலில் அதிக வரி விதிக்கக் கூடாது.பொருளாதாரம் உச்சத்தில் இருந்தால்தால் வரி விதிக்கலாம்.   ஆனால் ஊரடங்கின்போது `வரி விதிப்பது  மக்களை ஏழ்மையில் தள்ளிவிடும். எனவே நாட்டு மக்களுக்கு பணத்தை நேரடியாக வழங்க வேண்டுமென தொடர்ந்து கூறி வருகிறோம்.  ஆனால் மத்திய அரசு வழங்குவதற்குப் பதிலாக மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது ’’என தனது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.