மக்கள் கஷ்டம்தான் முக்கியம்; திருமணத்தை நிறுத்தும் பிரதமர்!
நியூஸிலாந்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தன் திருமணத்தை ஒத்திவைக்க பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் முடிவு செய்துள்ளார்.
நியூஸிலாந்து பெண் பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்ன் நாட்டில் கொரோனா பாதிப்புகளை தடுப்பதில் ஆக்கப்பூர்வமாக பணியாற்றியதாக பாராட்டை பெற்றவர். பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னும் அவரது நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகள் முன்னதாக திருமண நிச்சயம் நடந்து முடிந்தது.
நியூஸிலாந்தில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்ததால் அவர்களது திருமணம் பிப்ரவரி மாதம் நடைபெறுவதாக அறிவிக்கபட்டது. இந்நிலையில் தற்போது நியூஸிலாந்தி மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த தொடங்கியுள்ளன. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம் என தெரிவித்துள்ள ஜெசிந்தா ஆர்டர்ன் தனது திருமணத்தை நிறுத்திவைப்பதாக முடிவெடுத்துள்ளார். பாதிப்புகள் குறைந்த பின் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.