வாட்ஸ் அப்பில் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை: சவுதி அரேபியா அறிவிப்பு!
வாட்ஸப்பில் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்பில் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு எமோஜி அனுப்பும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் வாட்ஸப்பில் அனுமதி இன்றி சிவப்புநிற ஹார்ட் எமோஜி மெசேஜை அனுப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து புகார் அளித்தால் அனுப்பியவருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஒரு லட்சம் சவுதி ரியால் அபராத தொகையை கட்ட வேண்டும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது
எனவே வாட்ஸ் அப்பில் சிகப்பு இதய எமோஜி அனுப்பும் முன் பல முறை யோசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது