திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (03:34 IST)

டபுள் சைட் டிஸ்ப்ளே: சாம்சங் நிறுவனத்தின் புதிய முயற்சி

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டெ வரும் நிலையில் ஸ்மார்ட்போன்களின் மாடல்களும் புதுப்புது வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக டிஸ்ப்ளேவில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலகின் முன்னணி இடங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வளைவான டிஸ்ப்ளேவுக்கு பேடண்ட் உரிமை வாங்கி அதன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் மேலும் ஆச்சரிய விஷயமாக டபுள் சைட் டிஸ்ப்ளே மாடலுக்கும் தற்போது பேடண்ட் உரிமை வாங்கியுள்ளது. இந்த புதிய டபுள் சைட் டிஸ்ப்ளே மாடலில் பின்பக்கமும் டிஸ்ப்ளே இருக்கும். ஆனால் பின்பக்கம் இருக்கும் டிஸ்ப்ளேவின் அளவு, முன்பக்கம் இருப்பதை விட பாதி அளவே இருக்கும். இந்த மாடல் வரும் 2018 இறுதியில் அல்லது 2019ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.