திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (15:01 IST)

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்; சத்தீஸ்கர் அரசு அதிரடி

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏழைமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.

 
சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி கிராம இளைஞர்கள், நகரத்தில் உள்ள ஏழை குடும்பத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்பட உள்ளது.
 
இதற்காக அரசு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது செல்போன் பெறுவதற்கு யார் தகுதியானவர்கள் என்பதை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதன் பின்னரே செல்போன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 55 லட்சம் ஸ்மார்ட்போன்3821கள் வழங்க முடிவு செய்துள்ளது.