திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (21:05 IST)

கழிவறையில் செய்யப்படும் சமோசா... 30 ஆண்டுகளாக இயங்கும் ஹோட்டலுக்கு சீல்!

Chicken samosa
சவூதி அரெபியாவில் 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள  ஜெட்டா நகரில் ஒரு உணவகம் சுமார் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

அப்பகுதியில் உள்ளவர்களின் தகவல் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, புகழ்பெற்ற அந்த ஹோட்டலில் சமோசா உள்ளிட்ட சில பலகாரங்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அங்குதான் மதிய உணவும் பிற உணவுகளும் தயாரிக்கப்படுவதுடன் , காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடைக் கட்டிகள் அந்த உணவகத்தில் தயாரிக்கப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தெரிந்தது.

30 ஆண்டுகளாக இயங்கி வரு உணவகத்தில் சுகாதார அட்டைகளும் கொடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.  தற்போது இந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சுகாதாரமற்ற உணவகம் மூடப்படுவது அப்பகுதியில் இது முதன்முறையல்ல என விமர்சனம் எழுந்துள்ளது.