1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (20:59 IST)

ரஷ்யா, இங்கிலாந்து வழங்கிய ஆயுதங்களை அழித்த ரஷ்யா

உக்ரைனுக்கு அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து வழங்கிய ஆயுதங்களை அழித்து விட்டதாக           ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யா ராணும் அத்துமீறி நுழைந்து தொடர்ந்து 63 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இது 3 ஆம் உலகப் போருக்கு ஆரம்பம் என பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள  நிலையில் ரஷ்யா பின் வாங்கவில்லை.

ரஷ்யா தன் படைப்பலத்தையும் ஆயுதப் பலத்தையும் இழந்து  வருவதாகவும்,  பாதி ஆயுதங்களை இழந்துவிட்டதாக அமெரிக்கா கூறியிருந்தது.

இந்நிலையில்  உக்ரைனின் நட்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து வழங்கிய ஆயுதங்களை அழித்து விட்டதாக           ரஷ்யா கூறியுள்ளது.

இந்த ஆயுதங்கள் உக்ரைனில் உள்ள                ஜபோரிஜியா அலுமினிய ஆலை அருகே கிடங்கில் வைத்திருந்தாகவும்,    அவற்றை கடல்தாண்டி தாக்கும் காலிபர் ஏவுகணைகள் மூலம் அழித்ததா           ரஷ்யா கூறியுள்ளது. இதனால் உக்ரைன் பாதி க்கப்படும் என தெரிகிறது.