வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (18:11 IST)

பொதுத்தேர்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் மட்டுமே கேள்விகள் - பள்ளிக்கல்வித்துறை

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பள்ளி பொதுத்தேர்வுகள் நடந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி தேர்வாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில் பொதுத்தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளன.

அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 5ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்குகிறது.

இதற்கான ஹால் டிக்கெட்டுகளை பள்ளி மாணவர்கள் இன்று மதியம் 2 மணி முதல் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ என்ற தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் மட்டுமே கேள்விகள் எழுப்பப்படும் எனவும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாணவர்கள் முழுமையாக படிக்க வேண்டும் எனவும் இதுகுறித்து விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பாடத்திட்ட விவரங்களை அறியலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.