திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (16:35 IST)

யுக்ரேன் எல்லைக்கு அருகில் ரஷ்ய படைகள் அதிகரிப்பு: புகைப்பட தொகுப்பு!

மேற்கு ரஷ்யாவில் புதிய படைகளை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக, சில செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.

 
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மேக்சர் தொழில்நுட்ப நிறுவனம், மேற்கு ரஷ்யாவில் புதிய படைகளை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக, சில செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.
 
தெற்கு பெலாரஸில் 100க்கும் அதிகமான ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும், யுக்ரேன் எல்லைக்கு அருகில் உள்ளவையாகும். சமீப நாட்களாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து விரிவான ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது.
 
ஆனால், இந்த புகைப்படங்கள் குறித்து ரஷ்யா மற்றும் பெலாரூஸ் ஆகிய நாடுகள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.