செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (10:14 IST)

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்… ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ரஷ்ய வீராங்கனை!

சீனாவின் பெய்ஜீங்கில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடந்து வருகிறது.

பெய்ஜிங்கில் சமீபத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் காரணங்களால் சில நாடுகள் தங்கள் தூதர்களை சீனாவுக்கு அனுப்பாததால் சர்ச்சை எழுந்தது.

இந்த தொடரில் ஃபிகர் ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் வந்த ரஷ்ய வீராங்கனையான கமிலா வலைலா மீது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் நாளை நடக்க உள்ள இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கபடுவார். ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டை தவறு என நிரூபிக்கும் வரையில் அவருக்கான பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.