1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (09:41 IST)

ஏதாவது பேசி உங்க அப்பா ஆட்சிக்கு மோசம் செய்துவிடாதே தம்பி… உதயநிதிக்கு செல்லூர் ராஜு அட்வைஸ்!

மதுரையில் உள்ளாட்சி தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

விரைவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரையில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமுக அரசை விமர்சித்து பேசினார்.

அவரது பேச்சில் ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாக சொன்ன திமுக அரசு இன்னும் அதை செய்யவில்லை. முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். ஏற்கனவே இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. அதனால் அப்படி எல்லாம் பேசாதீங்க தம்பி. இப்போது பிரதமராக மோடி இருக்கிறார். ஏதாவது பேசி உங்க அப்பாவின் ஆட்சிக்கு மோசம் செய்துவிடாதே தம்பி. திமுக அரசு வாயிலேயே அல்வா, வடை, தோசை எல்லாம் சுடுவார்கள். அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றமாட்டார்கள்’ என்று பேசியுள்ளார்.