தொடர்புடைய செய்திகள்
- யுக்ரேன் போர்: இந்தியா ஏன் ரஷ்யாவிடம் அதிகமாக எண்ணெய் வாங்குகிறது?
- நாளை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஸெலென்ஸ்கி
- யுக்ரேன் தலைநகர் கீயவில் குண்டுவெடிப்புகள்
- யுக்ரேன் – ரஷ்யா மோதல்: ‘மக்களுக்கு எதிராக தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது ரஷ்யா' – யுக்ரேன்
- மரியுபோலில் கொடூர தாக்குதல்: 210 குழந்தைகள் உட்பட 5,000 பேர் மரணம்
செர்னோபிலில் இருந்து வெளியேறும் ரஷ்ய படைகள்! – அமெரிக்கா தகவல்!
உக்ரைனின் ரஷ்ய படைகள் தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் தற்போது செர்னோபிலில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகியுள்ளது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவை எதிர்த்து உக்ரைனும் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
சமீபத்தில் மரியோபோலை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் உக்ரைனின் செர்னோபில் அணு உலையையும் கைப்பற்றியது. இதுகுறித்து தெரிவித்த உக்ரைன், ரஷ்யா செர்னோபிலை கைப்பற்றியுள்ளதால் உலகம் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது என கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது மரியோபோலை விட்டு ரஷ்ய ராணுவம் வெளியேறி இருப்பதாகவும், செர்னோபிலை கைவிட்டு பெலாரஸ் நோக்கி நகர்ந்திருப்பதாகவும் அமெரிக்கா பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. எனினும் ரஷ்யா முழுமையாக உக்ரைனை விட்டு வெளியேறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
