செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

அமெரிக்காவில் வேகமாக பரவும் பிஏ.2 ஒமைக்ரான் வைரஸ்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அமெரிக்காவில் பிஏ.2  என்ற உண்மை ஒமைக்ரான்  வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சாதாரண ஒமைக்ரான் வைரஸை விட இந்த பிஏ.2  ஒமைக்ரான்  வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் கடந்த ஒரே வாரத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகமாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியபோது கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 39 சதவீதமாக இருந்த ஒமைக்ரான்  வைரஸ் பாதிப்பு தற்போது அதிகபட்சமாக இருப்பதால் பொதுமக்கள்  கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது