வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (08:43 IST)

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை : ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 
 
உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டாம் என ஐநா பொதுச் செயலாளர் மற்றும் அமெரிக்காவின் அதிபர் கூறிய நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய பிரதமர் புதின் உத்தரவிட்டுள்ளார்
 
உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவிய சூழ்நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என ரஷ்ய அதிபர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை வேண்டாமென்றும் உக்ரைன் எல்லையில் நிறுத்திய ரஷ்ய படைகள் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த உத்தரவால் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது