1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (17:29 IST)

போர் பதற்றம்: உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்!

உக்ரைனில் அவசர நிலையை பிரகடனம் செய்ய அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

 
இந்த கவுன்சிலின் கூட்டம் நடந்து முடிந்த பின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஓலேக்சி டனிலோஃப் பேசுகையில், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் உக்ரைனிய படைகள் போர் புரிந்துவரும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் தவிர, அனைத்து பகுதிகளிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் என தெரிவித்தார்.
 
முதல் கட்டமாக, இந்த அவசரநிலை 30 நாட்களுக்கு நீடிக்கும் என அவர் கூறினார். எனினும், இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் அரசு நாடாளுமன்றத்தில் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அந்நாட்டு அரசு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.