1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (18:54 IST)

144 உத்தரவால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில்     நாளை வரை 144    உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால்  பள்ளி, கல்லூரிகளுக்கு   விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடாக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான   பாரதிய ஜனதா  கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இம் மா நிலத்தின் ஷிவமொகா என்ற மாவட்டத்தில் பஜ்ரங் தளம்  அமைப்பைச்  சேர்ந்த   நிர்வாகி ஹர்ஷா சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு பதற்றம் நிலவையதை அடுத்து, 2 நாட்களுக்கு ஷிவமொகா பகுதியில் 144  தடை உத்தரவிடப்பட்டுள்ளது.