1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (16:25 IST)

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால், இருளில் மூழ்கிய உக்ரைனின் ஒடேசா நகரம்..

drone
ரஷ்யாவால் உக்ரைனில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இந்த தாக்குதலில் முக்கிய நகரம் ஒன்று முழுவதுமாக மின்சாரமின்றி இருளில் தவித்து வருவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக  உக்ரைன் நாட்டின் ஒடேசா என்ற நகரம் மின்சாரம் இன்றி தவித்து வருவதாகவும் அதனால் அந்த பகுதியில் வசிக்கும் ஒன்றரை மில்லியன் மக்கள் இருளில் தவித்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்
 
இந்த நிலையில் ஒடேசாவில் மின்சாரத்தை மீட்டெடுக்க சில வாரங்கள் ஆகும் என்று தெரிவித்து அதிபர், சேதமடைந்த மின் கட்டமைப்புகளை சீரமைக்க இரண்டு முதல் மூன்று மாதங்கள் கூட ஆக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 
Edited by Mahendran