1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (08:29 IST)

நேட்டோ கதவு திறந்தே இருக்கிறது! உக்ரைன் வரும்! – நேட்டோ பொதுசெயலாளர் நம்பிக்கை!

NATO
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடங்கிய நிலையில் உக்ரைன் விரைவில் நேட்டோவில் இணையும் என நேட்டோ பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய கூட்டு ராணுவமாக நேட்டோ அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் சமீபத்தில் உக்ரைனும் சேர இருந்த நிலையில் ரஷ்யா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மேல் போர் தொடர்ந்தது.
கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நேட்டோவில் இணையும் முயற்சிகளும் நடக்காமல் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டில் நடந்த நேட்டோ உறுப்பு நாடுகளின் மந்திரிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய நேட்டோ பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் “நேட்டோவின் கதவு எப்போது திறந்தே இருக்கிறது. நேட்டோவில் உலக நாடுகள் இணைய விரும்பினால் அதை தடுக்கும் அதிகாரம் ரஷ்யாவுக்கு கிடையாது. உக்ரைனை நேட்டோவில் இணைப்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒருநாள் உக்ரைன் நேட்டோவில் இணையும். அதுவரை போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு தேவையான உதவிகளை அளிப்பதில் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.

Edited By Prasanth.K