மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்தாரா அதிபர் புதின்?
ரஷ்ய அதிபர் புதின் குறித்து அவ்வப்போது வதந்தி மற்றும் புரளிகள் ஏற்படும் என்றும் சமீபத்தில் கூட அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புதின் மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்து உள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரது முதுகுத்தண்டில் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் வதந்தி கிளம்பியுள்ளது
இந்த வதந்தியை முறியடிக்கும் வகையில் புதின் சமீபத்தில் பொதுமக்கள் மத்தியில் தோன்றினார். அவர் ரஷ்யாவில் உள்ள ஒரு முக்கிய பாலத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதன்மூலம் ரஷ்ய அதிபர் புதினுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Edited by Mahendran