செவ்வாய், 4 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2022 (18:15 IST)

சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு ஐபேட்: உக்ரைன் அதிபர் நெகிழ்ச்சி

ukraine president gift
சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு ஐபேட்: உக்ரைன் அதிபர் நெகிழ்ச்சி
ரஷ்யா இராணுவத்தால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் நாட்டின் சிறுவர்களை நேரில் சந்தித்து ஐபோன் கொடுத்த உக்ரைன் அதிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்ய ராணுவத்தினரால் தாக்கப்பட்ட  உக்ரைன் சிறுவர்கள் தலைநகரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சமீபத்தில் சந்தித்த அதிபர் செலன்ஸ்கி, அவர்களுக்கு  ஐபேட் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறுவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்