வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (10:53 IST)

நான் இருந்திருந்தா ரஷ்யாவை ஆட்டியிருப்பேன்..! – அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் தான் அதிபராக இருந்திருந்தால் அதை தடுத்திருப்பேன் என கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகும் நிலையில், உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாட்டு வீரர்களும் பலியாகி வருவதுடன், மக்கள் பலரும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் போர் விவகாரம் குறித்து சமீபத்தில் தொலைகாட்சி ஒன்றில் பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் “ஜோ பைடனுக்கு பதிலாக தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை விடுக்காதபடி செய்திருப்பேன்” என தெரிவித்துள்ளார்.